சமகால புதிய கவிஞர்களின் கவிதைகள்
சில சம கால கவிஞர்கள்:
இது இப்போது தமிழ் கவிதையில் என்ன நிகழ்கிறது என ஒரு சோற்றுப் பதம் பார்க்க. இதை நாம் விவாதிக்கப் போவது இல்லை. இதில் இருந்து ஏதேனும் ஓரிரு கவிதைகளை நாம் முகாமில் வாசிக்க வாய்ப்பு உண்டு. இதில் அர்த்தமாகா கவிதைகளை முன்வைத்து கூட வாசகர்கள் முகாமில் பொருத்தமான வாசிப்பு குறித்து கேட்கலாம். இவற்றை தேர்வு செய்தவர் கவிஞர் மதார்.
புதிய கவிஞர்களின் பட்டியல்:
1. சம்யுக்தா மாயா கவிதைகள் - இணைப்புஅமர்வு நடத்தும் கவிஞர்களின் சில கவிதைகள்:
1.
படையலுக்கும்
அம்மாவிற்கும் இடையே
எப்போதும் ஒரு விளக்கு இருக்கிறது
அதை ஏற்றித்தான் அவள்
அந்தச் சுவரில் உள்ள படங்களை
எங்களுக்குத் தெய்வமாக்கினாள்
சோ. விஜயகுமார்
2.
நான் அவளை
சிறுவிரல் பற்றி
அழைத்து வருவேன்
நீங்கள் இந்த
உலகை கொஞ்சம்
ஒழுங்குபடுத்தி வைக்கிறீர்களா?
ஆனந்த் குமார்
3.
அனாதை இல்லங்களில்
அனாதைக் குழந்தைகள்
பிரார்த்தனையில் ஈடுபடுவதைப்
புரிந்துகொள்ள முடிந்ததில்லை
அவர்கள் எந்தக் கடவுளிடம்
வேண்டிக்கொள்கிறா்கள்?
அவர்களை
அனாதைகளாக விட்ட
கடவுளிடமா?
போகன் சங்கர்
4.
“ஏமாற்றுப் பேர்வழி”
எடை தூக்க
என்னையே அழைப்பாள்
கர்ப்பிணி மனைவி
ஒருநாள்கூடக் கேட்டதில்லை
அவள் தூக்கி வைத்திருந்ததை
கொஞ்சம் வாங்கிக்கச் சொல்லி
நானும் பார்த்தேன்
என்னடா இவள் இப்படி
பண்ணுகிறாளேயென்று
அவள் மட்டும்தான் சுமப்பாளாம்
ஒரு நாள்
கேட்டேவிட்டேன்
அவள் புன்னகையுடன்
கையில் தந்தாள்
அது அப்படி ஒன்றும் கனமாய்
இல்லை
சரியான ஏமாற்றுப் பேர்வழி
மதார்
Comments
Post a Comment