புதுச்சேரி தாமரைக்கண்ணன் அமர்வு - தமிழ் சந்தப்பாடல்கள் மரபு
சந்தப்பாடல்கள் மரபு விவாதத்திற்கான முன்குறிப்பு: தமிழ் இசைப்பாடல் மரபில் சந்தப்பாடல்களுக்கென்று முக்கியமான இடமுண்டு. அதிக அளவில் சந்தப்பாடல்களை இயற்றி இம்மரபை பெரிதும் வளர்த்தவர் அருணகிரிநாதர். இன்று எளிதில் அணுகக்கூடிய திருப்புகழ் பாடல்கள் அன்றி, தமிழ் மரபிலக்கியத்தில் ஓசைநயம் மிக்க பாடல்களை இயற்றிய ஏனைய புலவர் மரபை அறிமுகப்படுத்தும் விதமாக இங்கு காரைக்காலம்மை, ஒட்டக்கூத்தர், தாயுமானவர், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள், குரவை இராமானுச தாசர் ஆகிய ஐந்து கவிஞர்களின் பாடல்கள் அளிக்கப்பட்டுள்ளன. சந்தப்பாடல்கள் 1 : தக்கயாகப்பரணி -ஒட்டக்கூத்தர் பரணியில் காப்புப்பாடல்களையடுத்து கடை திறப்பு. வெவ்வேறு இடங்களது பெண்களையும் கடை திறக்க அழைக்கிறார் கூத்தர். முடிதுமெனமறை முதலியபரவவும் முறிதுமெனநிசி சரர்குலமிரியவும் முரிதுமெனவெழு குலகிரிகுலையவும் முளிதுமெனவெழு புணரிகண்மறுகவும் மடிதுமெனமகி தலநிலைதளரவும் மறிதுமெனவடி சுரபதிவருடவும் வரதனொருதமிழ் முனிவரன்வரவரு மலயவரையர மகளிர்கடிறமினோ ஏனைய அடிகள் - தனன தனதன ...