ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025
நண்பர்களே, ஏப்ரல் 12,13 தேதிகளில் ஓசூரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தவுள்ள கவிதை முகாமிற்கு வரவேற்கிறோம். இதில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் சுமார் 50 பேர் பங்கேற்கின்றனர். உங்கள் ஈடுபாட்டாலும் உரையாடலில் காத்திரமான பங்கேற்பாலும் மட்டும் தான் இம்முகாம் வெற்றி பெறும். கீழே உள்ள கவிதைகள் அனைத்தையும் பங்கேற்பாளர்கள் வாசித்து விட்டு வர வேண்டும். முன்பே சொன்னதுபோல உங்களால் அர்த்தம் கொள்ள இயலாத கவிதைகளை கவிஞர் பெயர், அது இடம்பெற்ற புத்தகம் ஆகியவற்றை குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்புங்கள், அவை அரங்கில் வாசிக்கப்பட்டு அதன் சாத்தியங்கள் எட்டப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சனி காலை முதல் ஞாயிறு மதியம் வரை அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென்பது கூட்டாக ஏற்கப்பட்ட விதி. நிகழ்ச்சியில் ஒரு ஆச்சர்யப்படத்தக்க சிறப்பு இணைப்பு உண்டு. அமர்வுகளுக்கான கவிதைகளின் இணைப்புகள். 1. கவிஞர் க. மோகனரங்கன் - கவிதையும் மொழி பெயர்ப்பும் 2. கவிஞர் இசை - எப்படி எழுந்தனவோ 3. அனங்கன் - ஒரு களம் - நான்கு காவியம் 4. கவிநிலவன் - பழந்தமிழ் இலக்கியத்தில் உவமைகள் 5. புதுச...