கவிஞர் க. மோகனரங்கன் அமர்வு - கவிதையும் மொழி பெயர்ப்பும்

 விவாதத்திற்கான முன்குறிப்பு:

'ஒரு நல்லக் கவிதை புரிவதற்குமுன் உணர்த்திவிடும்' என்பது எலியட்டின் பிரபலமானக்கூற்று. கவிதை வாசிப்பில் முதலாவது அனுபவம் அது தரும் உணர்வு. பிறகு நமது முந்தைய வாசிப்பு மற்றும் அனுபவங்களோடு ஒப்பிட்டு இந்த உணர்வை புரிந்துகொள்ள முயல்கிறோம். இந்த புரிதல் இரண்டாவது படிநிலை. முதல் நிலையில் நாம் உணர்ந்த ஒன்று இரண்டாவது நிலையில் நம் அனுபவத்திற்கு அகப்படாமல் போவதால் ஒரு கவிதை

புரியாமல் போகவும் வாய்ப்பு உண்டு.

ஏனெனில் கவிதை ஒரு கருத்தை அல்ல ஒரு உணர்வு நிலையை முன்வைக்கிறது. அது எதையும் திட்ட வட்டமாக சொல்ல முயல்வதில்லை. மாறாக குறிப்புணர்த்தவே முயல்கிறது. கவிதையின் அக இலட்சணங்களில் ஒன்று அதன் புகைமூட்டம். தீர்க்கத்தைவிடவும் தெளிவின்மையால் கூடும் புதிர்த்தன்மையே ஒரு கவிதையின் வாசிப்பை ஆழமாக்குகிறது. கயிறோ அரவமோ அல்ல கவிதை பற்ற முனைவது கயிற்றரவை மாத்திரமே. கவிதை தன் சொற்கள் வழியாக சுட்ட முற்படுவது சொற்களுக்கு முந்தைய அனுபவத்தை அல்லது சொற்களுக்கு அப்பாலான அர்த்தப் பரப்பை எனலாம். ஒரு வசதிக்காக வேண்டி அதை சுருக்கி தொனி என்று நாம் சொல்லலாம். ஆக ஒரு கவிதை புரியவில்லை என்று சொல்வது அதன் கருத்து விளங்கவில்லை என்பதால் அல்ல மாறாக அதன் தொனி நமக்கு பிடிபடவில்லை என்பதால்தான். இந்த அமர்வில் இங்கே பகிரப்பட்டிருக்கும் இந்த கவிதைகளைக் கொண்டு ஒரு கவிதையின் தொனியை எப்படி 

அடையாளம் காண்பது அதன் வழி அக் கவிதையை எவ்விதம் அனுபவங்கொள்கிறோம் என்பதை நாம் பரஸ்பரம் பேசிப்பார்க்கலாம்.

கவிதைகள்:


நீரின் திறவுகோல் தொகுப்பு - தமிழில் க. மோகனரங்கன் 


1. மறதிநோயுடைய ஒருவன்


ஞாபகமறதி கொண்ட ஒருவன் 

கையிலேந்திய தட்டுடன் 

தன் வீட்டுக் கதவையே 

தட்டிக்கொண்டிருக்கிறான்.

கடவுளிடமிருந்து கடவுளே 

இரட்சிப்பையும் தானத்தையும் 

கோருகின்ற அக் கொடிய வியாதியினின்றும் 

எனது குருநாதர் 

என்னை முழுவதுமாய் குணப்படுத்தினார்.

கபீர்



2. நமது இரு அமைதிகள்


என்னுள்ளாகவும்

எனக்கு வெளியேயும்

பாய்ந்தோடும்

அமைதி

கழுவிப் போகிறது

எனது கடந்த காலத்தை.

ஏற்கெனவே தூய்மையாகிவிட்ட நான்

உனக்காகக் காத்திருக்கிறேன்

உனது அமைதியை கொண்டுவருவாயென.

ஒன்றோடு ஒன்று

கைகளைப் பற்றியபடி

உறங்கக்கூடும்

நமது இரு அமைதிகள்.

- அன்னா ஸ்விர் 


3. அமைதி

அமைதி கூறியது 

உண்மைக்கு விளக்கம் எதுவும் தேவையில்லை.

குதிரை வீரன் இறந்தபிறகு 

வீடு நோக்கி விரைந்தோடி வரும் குதிரை 

எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறது 

எது ஒன்றையும் சொல்லாமலேயே.

- ஆடம் ஜகஜேவஸ்கி 


4. வாகனக் கண்ணாடி

பின்னோக்கு ஆடியில் திடுமென, 

'போவாயிஸ்' தேவாலயத்தின் 

பெரும்பகுதியைக் கண்டேன்.

பெரிய விஷயங்கள் 

ஒரு கணம் 

தங்குகின்றன 

சிறியவற்றுள்.

- ஆடம் ஜகஜேவஸ்கி 


5. கனவுகளின் ராஜ்ஜியம்

எனது கனவுப்புத்தகத்தின் முகப்புப் பக்கத்தில் 

எப்போதுமே மாலைப் பொழுதுதான்.

ஆக்கிரமிக்கப் பட்டதொரு தேசத்தில் 

ஊரடங்கிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 

சிறிய நாட்டுப்புற நகரத்தில் 

வீடுகள் இருளில் ஆழ்ந்திருக்க 

கடை வாயில்களோ மூடியிருந்தன.

சென்றிருக்கக் கூடாத தெருவின் முனையில் 

மேலங்கியின்றித் தனியே நிற்கிறேன். 

எனது சீழ்க்கைக்கு பதில் தரும் 

கருப்பு நாயைத் தேடி வெளியே வந்திருந்தேன்.

என்னிடம் ஒரு ஹாலோவீன் முகமூடியிருந்தது 

எனினும் அதை அணிவதற்கு நான் அஞ்சினேன்.

Charles Simic

Charles Simic: 

Dušan Simić was born in Belgrade. In his early childhood, during World War II, he and his family were forced to evacuate their home several times to escape indiscriminate bombing of Belgrade. Growing up as a child in war-torn Europe shaped much of his worldview, Simic stated. In an interview from the Cortland Review he said, "Being one of the millions of displaced persons made an impression on me. In addition to my own little story of bad luck, I heard plenty of others. I'm still amazed by all the vileness and stupidity I witnessed in my life.

----

ஒரு கவிதை பல மொழிபெயர்ப்பு :

The original Japanese:


Furu ike ya
kawazu tobikomu
mizu no oto
 


1. Into the ancient pond
A frog jumps
Water’s sound!

 

Translated by D.T. Suzuki


2. An old pond —
The sound
Of a diving frog.

 

Translated by Kenneth Rexroth

 

3.
old pond
frog leaping
splash

 

Translated by Cid Corman

 

4.
The old pond,
A frog jumps in:
Plop!

 

Translated by Alan Watts

 

5.
Old dark sleepy pool
quick unexpected frog
goes plop! Watersplash.

 

Translated by Peter Beilenson

 

6.
old pond
a frog leaps in —
a moment after, silence

 

Translated by Ross Figgins

7.


pond
     frog
          plop!

 

Translated by James Kirkup


 

1. பழைய குட்டை அது;

ஒரு தவளை அதில் தத்துகிறது.

சள சள.

 - கா நா சு

 

2. பழைய குளம்

தவளை குதிக்க

நீரின் சப்தம்

 

3. பழைய குளம் .....

ஒரு தவளை குதிக்கும்

தண்ணீர் சத்தம்

 ----------

ஜென் குளம்

 

தவளையொன்று நீரில் குதித்தது

பின்வந்த தவளை

ஒரு ப்ளக் என்ற சத்தத்தில் குதித்தது

அடுத்து வந்த தவளை

ஒரு தளும்பும் வட்டத்தில் குதித்தது

அதற்கடுத்த தவளையோ

நீரைத் திறந்துமூடும் மையத்தில் குதித்தது

இலக்கற்று துவங்கிய பயணம்

அலையலையாய் விரிந்தபடி

எங்கெங்கோ சென்றாலும்

எல்லாம் ஓரெல்லைவரைதான்

ஓரெல்லைவரைதான்

சற்றுநேரத்தில் மீண்டும் குளமெங்கும்

நிச்சலனம்.

பாருங்களேன்,

இவ்வளவு நடக்கின்றன 

ஆனால் எந்தவித தடயங்களுமில்லை

             -        கவிஞர் பெரு.விஷ்ணுகுமார்

      -------------

கூடுதல் வாசிப்பு:

1.

அடித்தளங்கள்

மணல் மீது கட்டினேன்

அது சரிந்து விழுந்தது.

பாறை மேல் எழுப்பினேன்

அது இடிந்து விழுந்தது.

இப்போது நான் கட்டவேண்டுமாயின்

புகை போக்கியிலிருந்து

வெளியேறும் புகையிலிருந்து

தொடங்குவேன்.

  • லெப்போல்டு ஸ்டாப்


2.

எது கவிதை?

இப்போது,

கவிதை என்றால் என்ன?

அது வெறும் வார்த்தைகளின்

விவகாரம்

என்று நீங்கள் சொள்வீர்களானால்,

ஒரு நல்ல கவிஞன்

சொற்களினின்றும்

விடுபட்டவனாகவே இருப்பான்

என்று நான் கூறுவேன்.

அது வெறுமனே அர்த்தங்கள்

சம்மந்தப்பட்ட விஷயம் என்று

விளக்கம் தருவீர்களென்றால்,

அர்த்தங்களிலிருந்தும் அவ்வளவாக

விலகியிருப்பவனே

நல்ல கவிஞன் என்று

நான் பதிலிறுப்பேன்.

‘ஆனால்… சொற்களும் அதன்

அர்த்தங்களும் இல்லாமல் 

எங்கிருக்கும் கவிதை?’

என்று நீங்கள் வினவும் பட்சத்தில்

உங்களுக்கு விடை சொல்கிறேன்

‘சொற்களினின்றும் விடுபட்ட பின்னும்

அர்த்தங்களிலிருந்து விலகிய பிறகும்

அங்கே இன்னும் மிஞ்சியிருப்பதே

கவிதை.’

  • யாங் வான் லீ  



3.
என் கவிதைகளை
கவிதைகள் என்று யார் சொன்னது?
என் கவிதைகள் கவிதைகளே
இல்லை.

என் கவிதைகள் கவிதைகள் அல்ல

என்பதை நீங்கள்

அறிந்துகொண்டால்,

அதன் பிறகு

கவிதையைப் பற்றி நாம் பேசலாம்.

  • ரியோகன்

   

Comments

Popular posts from this blog

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

கவிஞர் இசை அமர்வு: எப்படி எழுந்தனவோ

கவிஞர் மதார் அமர்வு - கவிதையில் சொல்லாட்சிகள்