பின் தொடரும் நிழலின் குரல்
பின் தொடரும் நிழலின் குரல் ஆனால் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற குழந்தைகள் கொல்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதிகாரங்களைக் கட்டியெழுப்பு கிறார்கள். அவற்றை எதிர்த்துப் புரட்சியும் செய்கிறார்கள். அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் பூமியைப் புரட்டிப் புரட்டிப் போடுகின்றன. சம்பந்தமற்ற வேறு ஓர் உலகில் கருணையுடன் சமைத்துப் பசியாற்றி, தட்டித் தூங்கவைத்து, அபயமும் தைரியமும் தந்து இவர்கள் வாழ்கிறார்கள். அன்னையரை இணைத்துக்கொள்ளும்போதுதான் புரட்சி தோற்கடிக்க முடியாததாக ஆகிறது என்று கார்க்கி கருதினான். கொந்தளிப்பு மேலோட்டமானது என்றும் அமைதியான ஆழமே சிருஷ்டிகரமானது என்றும் அவன் அறிந்திருந்தான்போலும். பாவம் கார்க்கி. அது வெறும் கனவாகப் போயிற்று. உலகின் எந்தப் புரட்சியிலும், எந்த ஆட்சியிலும், பெண்கள் பங்கேற்றதில்லை. போல்ஷவிக் புரட்சியும் அது போலத்தான். அது பெண்களைப் பயன்படுத்தியது. ஆனால் அது ஆண்களின் உலகில் நடந்த புரட்சி. உலகில் இதுவரை நடந்த அத்தனை அரசியல் சம்பவங்களும் அலைகள். நடந்து முடிந்த கற்பழிக்கப்பட்டுள்ளார்கள். கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அனாதையாக்கப்பட்டிருக்கிறார்கள்....