Posts

நிகழ்ச்சி நிரல்

ஓசூர் கவிதை ரசனை முகாம் 2025

நண்பர்களே, ஏப்ரல் 12,13 தேதிகளில் ஓசூரில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நடத்தவுள்ள கவிதை முகாமிற்கு வரவேற்கிறோம். இதில் ஆண்கள் பெண்கள் என மொத்தம் சுமார் 50 பேர் பங்கேற்கின்றனர். உங்கள் ஈடுபாட்டாலும் உரையாடலில் காத்திரமான  பங்கேற்பாலும் மட்டும் தான் இம்முகாம் வெற்றி பெறும். கீழே உள்ள கவிதைகள் அனைத்தையும் பங்கேற்பாளர்கள் வாசித்து விட்டு வர வேண்டும்.  முன்பே சொன்னதுபோல உங்களால் அர்த்தம் கொள்ள இயலாத கவிதைகளை கவிஞர் பெயர், அது இடம்பெற்ற புத்தகம் ஆகியவற்றை குறிப்பிட்டு எங்களுக்கு அனுப்புங்கள், அவை அரங்கில் வாசிக்கப்பட்டு அதன் சாத்தியங்கள் எட்டப்படும். பங்கேற்பாளர்கள் அனைவரும் சனி காலை முதல் ஞாயிறு மதியம் வரை அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்க வேண்டுமென்பது கூட்டாக ஏற்கப்பட்ட விதி. நிகழ்ச்சியில் ஒரு ஆச்சர்யப்படத்தக்க சிறப்பு இணைப்பு உண்டு.  அமர்வுகளுக்கான கவிதைகளின் இணைப்புகள். 1.  கவிஞர் க. மோகனரங்கன் - கவிதையும் மொழி பெயர்ப்பும் 2.  கவிஞர் இசை - எப்படி எழுந்தனவோ 3.  அனங்கன் - ஒரு களம் - நான்கு காவியம் 4.  கவிநிலவன் - பழந்தமிழ் இலக்கியத்தில் உவமைகள் 5.  புதுச...

பின் தொடரும் நிழலின் குரல்

 பின் தொடரும் நிழலின் குரல் ஆனால் இப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் பெற்ற குழந்தைகள் கொல்கிறார்கள், கொல்லப்படுகிறார்கள். அதிகாரங்களைக் கட்டியெழுப்பு கிறார்கள். அவற்றை எதிர்த்துப் புரட்சியும் செய்கிறார்கள். அவர்களுடைய வியர்வையும் ரத்தமும் பூமியைப் புரட்டிப் புரட்டிப் போடுகின்றன. சம்பந்தமற்ற வேறு ஓர் உலகில் கருணையுடன் சமைத்துப் பசியாற்றி, தட்டித் தூங்கவைத்து, அபயமும் தைரியமும் தந்து இவர்கள் வாழ்கிறார்கள். அன்னையரை இணைத்துக்கொள்ளும்போதுதான் புரட்சி தோற்கடிக்க முடியாததாக ஆகிறது என்று கார்க்கி கருதினான். கொந்தளிப்பு மேலோட்டமானது என்றும் அமைதியான ஆழமே சிருஷ்டிகரமானது என்றும் அவன் அறிந்திருந்தான்போலும். பாவம் கார்க்கி. அது வெறும் கனவாகப் போயிற்று. உலகின் எந்தப் புரட்சியிலும், எந்த ஆட்சியிலும், பெண்கள் பங்கேற்றதில்லை. போல்ஷவிக் புரட்சியும் அது போலத்தான். அது பெண்களைப் பயன்படுத்தியது. ஆனால் அது ஆண்களின் உலகில் நடந்த புரட்சி. உலகில் இதுவரை நடந்த அத்தனை அரசியல் சம்பவங்களும் அலைகள். நடந்து முடிந்த கற்பழிக்கப்பட்டுள்ளார்கள். கொன்று குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அனாதையாக்கப்பட்டிருக்கிறார்கள்....

சைதன்யா அமர்வு: Prose Poetry

விவாத்திற்கான முன்குறிப்பு: கவிதையில் குறியீட்டியல் (Symbolists) எனத் தனி இலக்கிய போக்கு பொ.யு. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்ஸில் தொடங்கியது. அதன் தொடக்கம்/முன்னோடியாக இருந்தவர் எட்கர் ஆலன் போ. சார்லஸ் போட்லேயர் அவ்வியக்கத்தின் பிதாமகன். அவரது ‘தி ஃப்ளார்ஸ் ஆப் ஈவில் (Les Fleurs du mal, The Flowers of Evil)’ பொ.யு. 1857-ல் பிரசுரமாகியது. இப்படைப்பு மனித சமூகத்திலுள்ள இருளுலகை (Decadent ) பற்றி பேசுபவை. இந்நூல் ப்ரான்ஸில் பல காலம் பிரசுரமாக தடை விதிக்கப்பட்டிருந்தது. எட்கர் ஆலன் போ எழுதிய ‘தி ரேவன் (அண்டங்காக்கை – The Raven)’ (1845) கவிதையில் நம்மை பயங்கொள்ளச் செய்யும் துயர அம்சங்களை உசாவியது. இருவரின் கவிதையும் மாயம்/மந்திரம் போல. அவை மனித மனத்தின் உள்ளாத்தின் வெளிப்பாடாக அமைந்ததே அன்றி வெறும் உரையாடல்கள் அல்ல. அவசிய வாசிப்பு பகுதிகள் Poem 1: The Voyage To Maxime du Camp To a child who is fond of maps and engravings The universe is the size of his immense hunger. Ah! how vast is the world in the light of a lamp! In memory's eyes how small the world is! One morning w...